வீசா வழங்கும் நடைமுறையில் புதிய திட்டம்!

On arrival visa எனப்படும் உள் நுழைவு வீசாவினை குறிப்பிட்ட நாடுகளுக்கு இலவசமாக வழங்கவுள்ளதாக இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியா, சீனா உள்ளிட்ட 46 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச வருகை நுழைவிசைவு வழங்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் 39 நாடுகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் நாட்டில் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலை காரணமாக அவை நிறுத்தப்பட்டிருந்தன.

எனினும் 46 நாடுகளுக்கு இலவச உள்வருகை வீசாவினை வழங்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

முன்னதாக, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் இந்த திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. தற்போது, இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக பல நாடுகள் இலங்கைக்கு பயண எச்சரிக்கை விடுத்திருந்தது. எனினும் அதனை பல நாடுகள் மீளப் பெற்றிருந்தன.

ரஷ்யா மாத்திரம் பயண தடையை இன்னமும் விலக்கிக் கொள்ளவில்லை. விரைவில் ரஷ்யாவும் அந்த தடையை விலக்கிக் கொள்ளும் என அமைச்சர் நம்பிக்கையிட்டார்.


Recommended For You

About the Author: Editor