ஜனாதிபதியின் கருத்துக்களினால் ஏமாற்றமடைந்துள்ளோம் – கத்தோலிக்க திருச்சபை!!

ஜனாதிபதியின் கருத்துக்களினால் ஏமாற்றமடைந்துள்ளதாக கத்தோலிக்க திருச்சபையின் செய்தித் தொடர்பாளர் ரெவ். ஜூட் கிருஷாந்த தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு எதிராக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை முன்வைத்த கருத்துக்கள் குறித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்கள் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அத்தோடு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கூறிய கருத்துக்கள் குறித்து சமூகத்தின் சில பிரிவினர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் நியாயமானவை அல்ல என்றும் அவர் கூறினார்.

கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆற்றிய உரையில் சில தவறான கருத்துக்கள் இருப்பதாக ஜனாதிபதி உணர்ந்திருந்தால், கர்தினாலுக்கு முன்னால் இந்த விடயத்தை தெளிவுபடுத்தியிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்த நாடாளுமன்ற தெரிவுக் குழு அமர்வுகளில் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆஜராகவில்லை என்றும் அதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பு கிடைக்கவில்லை என்றும் கத்தோலிக்க திருச்சபையின் செய்தித் தொடர்பாளர் ரெவ். ஜூட் கிருஷாந்த தெரிவித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல்கலினால் பாதிக்கப்பட்ட கட்டுவபிட்டிய செயின்ட் செபாஸ்டியன் தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட முதல் ஆராதனை நிகழ்வில், “அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லை, அது சர்வதேச சமூகத்தால் ஆணையிடப்படுவது தேவையற்றது” என கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்திருந்தார்.

இந்த கருத்திற்கு பதிலளித்த ஜனாதிபதி மைத்திரி, “ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து பல்வேறு அரசியல் நிகழ்ச்சி நிரல்களை மனதில் கொண்டு, யாரும் முடிவுக்கு வரக்கூடாது.

தாக்குதல்களுக்குப் பின்னர் அரசாங்கம் தனது கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றியது” என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor