இலங்கை விசாரணைகளில் இந்திய தேசிய புலனாய்வு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக்காக இலங்கையுடன் இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு இணைந்துள்ளது.

அந்தவகையில் இலங்கை அதிகாரிகளுக்கு குறித்த விசாரணையை தொடர்வதற்கு உதவுவதற்காக தேசிய புலனாய்வு குழு கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இந்திய ஊடகம் (Republic TV) தெரிவித்துள்ளது.

இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலுடன் இந்தியாவின் தொடர்பு குறித்து இந்த புலனாய்வு குழு விசாரணைகளை மேற்கொண்டு ஒரு வாரத்திற்குள் மீண்டும் நாடு திரும்பும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள 8 நாடுகள் இலங்கைக்கு உதவிவரும் நிலையில் தற்போதுவரை முக்கிய சந்தேகநபர்கள் 90 ற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கிட்டத்தட்ட விசாரணைகளை முடித்துள்ளதாக இலங்கை அதிகாரிகள் கூறுகின்றனர்.

சில ISIS ஆதரவாளர்கள் இந்தியாவின் பயிற்சி பெற்றுவிட்டு இலங்கைக்கு மீண்டும் திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இந்த விடயத்தில் இந்தியாவின் தொடர்பு குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தவுள்ளது.


Recommended For You

About the Author: Editor