நான் நாயகி அல்ல-ஷ்ரத்தா!!

திரையுலகில் அறிமுகமாகும் நடிகர், நடிகைகள் கதாநாயகனாக, கதாநாயகியாக வலம் வரவே விருப்பம் கொள்ளும் நிலையில் கதாநாயகியாக வலம் வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தான் கதாநாயகி அல்ல நடிகை என்று கூறுகிறார்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனது இன்ஸ்டகிராம் பக்கத்திலேயே இந்த வாசகத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பதிலளித்துள்ள அவர், “கதாநாயகன், கதாநாயகி என்ற வார்த்தைகள் உண்மையிலேயே நடிகர் என்ற வார்த்தையைப் பிரதிபலிக்கவில்லை.

கதாநாயகன் என்றால் பலரை அடித்து நொறுக்க வேண்டும். கதாநாயகி என்றால் அழகாகவும், கிளாமராகவும் இருக்க வேண்டும். நான் அப்படி அல்ல.

நடிகை என்று கூறும்போது நன்றாக நடிப்பவர் என்றும் கதாபாத்திரத்தைத் தோற்றத்தால் கொண்டுவருபவர் என்றும் விளங்கிக்கொள்ளலாம். கதாநாயகி என்ற வார்த்தை பயமுறுத்துவதாக உள்ளது. ஆனால், இப்போது அதைப் பயன்படுத்தி வருகிறேன்” என்று கூறியுள்ளார்.

இவன் தந்திரன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு விக்ரம் வேதா முக்கியத் திரைப்படமாக அமைந்தது. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தித் திரையுலகிலும் ஷ்ரத்தா பரபரப்பாக இயங்கிவருகிறார்.

அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். வித்யா பாலன் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கில் ஜோடி படத்திலும், கன்னடத்தில் கோத்ரா படத்திலும் நடிக்கிறார்.


Recommended For You

About the Author: Editor