யாழில் அந்தோனியார் சிலை உடைப்பு

யாழ்.கோட்டைக்கு அருகில் இருந்த அந்தோனியார் சொரூபம் இனம் தெரியாத நபர்களால் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு உடைக்கப்பட்டு உள்ளது.

கோட்டைக்கு அருகில் சிறிய அந்தோனியார் கோவில் ஒன்று உள்ளது. அங்கிருந்த சிலையினை நேற்றைய தினம் இரவு இனம்தெரியாத நபர்கள் உடைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த ஆலயத்தில் இருந்த அந்தோனியார் சிலை கடந்த சில மாதங்களுக்கும் முன்னரும் உடைக்கப்பட்டது. அது தொடர்பில் போலீசார் விசாரணைகளை முன்னெடுத்த போதிலும் எவரும் கைது செய்யப்படாத நிலையில் விசாரணைகள் நடைபெற்று  வரும் நிலையில் நேற்றைய தினம் மீண்டும் சிலை உடைக்கப்பட்டு உள்ளன.

Recommended For You

About the Author: ஈழவன்