தவறணை முகாமையாளரை தாக்கி பணம் கொள்ளை

தென்மராட்சி மந்துவில் பகுதியில் உள்ள கள்ளு தவறனைக்குள் புகுந்த கும்பல் ஒன்று முகாமையாளரை தாக்கி விட்டு பெருமளவான பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ளது.

தென்மராட்சி மந்துவில் பகுதியில் உள்ள கள்ளு தவறனைக்குள் இன்று புதன்கிழமை மதியம் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று அங்கிருந்த முகாமையாளரை தாக்கி விட்டு பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் தாக்குதலுக்கு இலக்கான முகாமையாளர் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: ஈழவன்