வெளிநாட்டிலிருந்து வந்தவர்களிடம் திருட்டு

வெளி­நாட்­டில் இருந்து வந்­த­வர்­க­ளு­டைய வீட்­டில் பணம், நகை­களை கொள்­ளை­ய­டித்­துச் சென்ற சம்­ப­வம் மானிப்­பா­யில் நேற்று இரவு நடந்­துள்­ளது.

யாழ்ப்பாணம் சண்­டி­லிப்­பாய், டச்சு வீதி­யில் உள்ள வீடொன்­றி­லேயே இந்­தச் சம்­ப­வம் இடம்­பெற்­றுள்­ளது.

30 பவுண் நகை­கள், 600 யூரோ, மற்­றும், 50 ஆயி­ரம் ரூபா பணம் என்­பன கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டுள்­ளன என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

வெளி­நாட்­டில் இருந்து வந்­த­வர்­கள் தங்­க­ளது உற­வி­னர்­க­ளு­டைய வீட்­டில் தங்­கி­யி­ருந்­துள்­ள­னர்.

நேற்று இரவு அனை­வ­ரும் நித்­தி­ரை­யா­கி­ய­போது திருட்டு நடந்­துள்­ளது என்று மானிப்­பாய் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

வீட்­டின் ஜன்­னல் கம்­பியை வளைத்து அத­னூ­டாக கொள்­ளை­யர்­கள் வீட்­டி­னுள் இறங்­கி­யுள்­ள­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

முறைப்­பாட்­டின் பிர­கா­ரம் விசா­ர­ணை­கள் இடம்­பெ­று­கின்ற என்­றும் மானிப்­பாய்ப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.


Recommended For You

About the Author: ஈழவன்