வெஜ் – ஃப்ரூட் சலட் – ஆரோக்கிய உணவு

தேவையானவை: வேகவைத்த உருளைக்கிழங்கு, வேகவைத்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு, தக்காளி, வெள்ளரிக்காய், பச்சை மிளகாய் – தலா ஒன்று, மாதுளை முத்துக்கள் – ஒரு கப், தேன் – 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, சாட் மசாலா, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: வேகவைத்த உருளைக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கை தோல் உரித்து பொடியாக நறுக்கவும். தக்காளி, வெள்ளரிக்காய், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும்.

இவற்றை ஒன்று சேர்த்து, கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து, ஜில்லென்றும் பரிமாறலாம்.


Recommended For You

About the Author: Editor