நெல்லியடி விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

யாழ்.வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நெல்லியடி சந்திக்கு அருகில் இன்று புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் நவிண்டில் பகுதியை சேர்ந்த முகுந்தன் கிரிசாந்த் (வயது 19) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் வேகோ ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த போது டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளான். குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் நெல்லியடி போலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: ஈழவன்