யானை தாக்கி வயோதிப பெண் பலி.

திருகோணமலை- திாியாய் பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளதுடன், மற்றொருவா் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் திரியாய் 05ஆம் வட்டாரத்தை சேர்ந்த 78 வயதுடைய நல்லையா வள்ளிப்பிள்ளை என தெரியவருகிறது. வயோதிப பெண் வீட்டிலிருந்து வெளியில் வந்தபோது யானை தாக்கியுள்ளதுடன், இந்த நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக குச்சவெளி பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை யானையின் தாக்குதலில் 46 வயதுடைய சுப்பிரமணியன் மயில் வாகனம் என்பவரே காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

திரியாய் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் காட்டு யானைகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இது குறித்து அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்