வடக்கு கடலில் எண்ணெய் வளம் – மாத இறுதியில் ஆய்வுகள் ஆரம்பம்.

யாழ்ப்பாணம் – மன்னார் – புத்தளம் கடற்பரப்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு அளவைத் தீர்மானிக்கும் வான்வழி ஆய்வு இந்த மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் என்று பெற்றோலிய வளங்கள் விருத்திச் செயலகம் (Petroleum Resources Development Secretariat) தெரிவித்துள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் தொழில்நுட்ப உதவியுடன் ஈர்ப்பு மற்றும் காந்த ஆய்வு இதன்போது முன்னெடுக்கப்படும் என்று பெற்றோலிய வளங்கள் விருத்திச் செயலகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

“யாழ்ப்பாணம் – மன்னார் – புத்தளம் வரையான கடற்பரப்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு அளவைத் தீர்மானிப்பது தொடர்பான வான்வழி ஆய்வு சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னெடுக்கப்படும்.

வடக்கு மாகாண கடற்பரப்பில் ஆழம் குறைவு காரணமாக கப்பல் மூலமாக ஆய்வை மேற்கொள்ள முடியாது. அதனால் வான்வழி ஆய்வு தெரிவு செய்யப்பட்டது.


Recommended For You

About the Author: ஈழவன்