தொன் கணக்கிலான பங்கோலின் செதில்கள், யானைத் தந்தங்கள் பறிமுதல்

கொங்கோ நாட்டிலிருந்து சிங்கப்பூர் வழியாக வியட்நாமுக்குக் கடத்தப்படவிருந்த சுமார் 12 தொன் பங்கோலின் செதில்கள், 9 தொன் அளவிலான யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தேசியப் பூங்கா அமைப்புடன் இணைந்து சிங்கப்பூர் சுங்கத் துறை, குடிவரவு சோதனைச் சாவடிகள் ஆணையகம் என்பன இந்த கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளன.

மரக்கட்டைகளை ஏற்றிச் செல்வதாகக் குறிப்பிட்ட 3 கொள்கலன்களைச் சோதனையிட்ட போது, செதில்களும் தந்தங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 66 மில்லியன் சிங்கப்பூர் டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட யானைத் தந்தங்களில் இதுவே மிகப் பாரிய தொகையாகும்.

சர்வதேச ரீதியில் யானைத் தந்தங்களையும் பங்கோலின் செதில்களையும் கடத்தும் செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மீண்டும் தவறான முறையில் கையாளப்படாமல் இருப்பதற்கு அவை அழிக்கப்படும் என்று சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor