2024 இல் முதல் பெண் நிலவில் – நாசா!!

2024 ஆம் ஆண்டு நிலவுக்கு முதல் பெண் அனுப்பப்படுவார் என்று அமெரிக்காவின் விண்வௌி ஆய்வு நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.

நிலவில் மனிதன் முதல் முறையாக கால் பதித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 2024-ம் ஆண்டு நிலவுக்கு முதல் பெண்ணை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலவில் முதல் பெண்ணை தரையிறக்கும் நாசாவின் புதிய திட்டத்திற்கு ‘ஆர்ட்டிமிஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

“2024-ம் ஆண்டில் ‘ஆர்ட்டிமிஸ் 1’ விண்கலம் நாசாவின் ஒரியன்ட் உந்துகணை மூலம் விண்ணில் ஏவப்பட்டு, முதல் பெண் நிலவில் கால் பதிப்பார்” என நாசாவின் நிர்வாக அதிகாரி ஜிம் பிரிட்டைன்ஸ்டைன் தெரிவித்தார்.

அத்துடன், ‘ஆர்ட்டிமிஸ்’ திட்டத்தின் மூலம் விண்வெளி துறையில் அமெரிக்கா மேலும் ஒரு சாதனையை படைக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Recommended For You

About the Author: Editor