மலிங்கவின் ஓய்வு குறித்து திமுத்!!

லசித் மாலிங்க அணியிலிருந்து விலகினால், சரியான தருணங்களில் விக்கெட்டுகளை கைப்பற்றக்கூடிய பந்துவீச்சாளர்கள் எம்மிடம் இல்லை என இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் மாத்திரம் விளையாடுவேன் எனவும், அந்த போட்டியுடன் ஒருநாள் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவேன் என்பதைனையும் மாலிங்க என்னிடம் தெரிவித்தார்.

ஆனால், தேர்வுக்குழுவிடம் என்ன கூறினார் என்பது தொடர்பாக எனக்கு தெரியாது. அவர் ஒரு போட்டியில் மாத்திரம் விளையாடுவேன் என்பதையே என்னிடம் கூறினார்.

நாம் இளம் வீரர்களை வளர்ச்சிப்பாதையை நோக்கி கொண்டு செல்ல எத்தணிக்கிறோம். லசித் மாலிங்க அணியிலிருந்து விலகினால், சரியான தருணங்களில் விக்கெட்டுகளை கைப்பற்றக்கூடிய பந்துவீச்சாளர்கள் எம்மிடம் இல்லை.

அதனால், ஒவ்வொரு தொடர்களிலும் இரண்டு அல்லது மூன்று புதிய வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு கொடுக்க எதிர்பார்த்துள்ளோம்’ என குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor