
யாழ். கோட்டை பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் சற்று முன்னர், ஆலயத்தில் இருந்த சிலை உடைக்கப்பட்டுள்ளதாகவும்
கோட்டை நுழைவு பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றிலேயே இந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு யாழ்ப்பாணம் பொலிஸார் சென்றுள்ளதாகவும், சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.