கிளிநொச்சி தருமபுரம் வைத்தியசாலை வீண் கட்டடமாய்!!

கிளிநொச்சி தருமபுரம் பிரதேச வைத்தியசாலைக்கு புதிய வெளிநோயாளர் பிரிவு அமைக்கப்பட்டு இரண்டு வருடங்களாக பயன்பாடின்றி காணப்படுகிறது எனப் பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

குறித்த வைத்தியசாலைக்குரிய வெளிநோயாளர் பிரிவுவானது எவ்வித திட்டமிடலும் இன்றி பொருத்தமற்ற இடத்தில் கட்டப்பட்டமையே இதற்கான காரணம் என தெரியவருகிறது.

தற்போது தருமபுரம் வைத்தியசாலை இங்கி வரும் காணியை அடுத்து தருமபுரம் கல்லமடுநகர் வீதி செல்லுகிறது. வீதிக்கும் வைத்தியசாலைக் காணிக்கும் இடையில் வெள்ள வாய்க்கால் ஒன்றும் உள்ளது.

இந்த வீதியைக் கடந்தால் காணப்படும் குடியிருப்பின் மத்தியில் புதிய வெளிநோயாளரர் பிரிவானது 22 மில்லின் செலவில் GFATM திட்டத்தின் உதவியுடன் 2016ஆம் ஆண்டில் கட்டப்பட்டு 2017ம் ஆண்டு ஆடிமாதம் 06ம் திகதி சுகாதாரத் திணைக்களத்திற்குக் கையளிக்கப்பட்டுள்ளது.

அதாவது வெளிநோயளார் பிரிவு வீதியின் ஒருபுறமும் மகப்பேற்று விடுதி உள்ளிட்ட நோயாளர் விடுதிகள் அடங்கலான ஏனைய பகுதிகள் வீதியின் மறுபுறமும் என வெவ்வேறாக காணப்படுகிறன.


Recommended For You

About the Author: Editor