துறைமுக நகர நிலப்பரப்பு கொழும்பு பிரதேச செயலகத்தின் கீழ்

துறைமுக நகர நிலப்பரப்பை, கொழும்பு பிரதேச செயலகத்துடன் இணைப்பது தொடர்பான யோசனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபட்டுள்ளது.

சீனாவின் முதலீட்டில் உருவாக்கப்படும், துறைமுக நகர நிலப்பரப்பை (1,105 ஏக்கர்) கொழும்பு பிரதேச செயலத்தின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான யோசனையை அமைச்சர் வஜிர அபேவர்தன நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.

இந்த யோசனைக்கு எவரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் வாக்கெடுப்பு இன்றி குறித்த யோசனை நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றபட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor