சாதனையில் ஜொலிக்கும் ‘கண்ணான கண்ணே’ பாடல் காணொளி!!

நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே’ பாடல் யூடியூப் தளத்தில் புதிய சாதனை படைத்துள்ளது.

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் கடந்த பொங்கல் பண்டிகையைமுன்னிட்டு வெளியானது.

இந்நிலையில், இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே’ பாடலின் லிரிக்ஸ் காணொளி யூரியூபில் 70 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

பாடலாசிரியர் தாமரை எழுதி, டி.இமான் இசையில் இமான், சித் ஸ்ரீராம் பாடிய இந்த பாடல் அஜித் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அஜித், நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சுமார் 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடி, இந்த ஆண்டின் blockbuster திரைப்படமாகத் திகழ்கின்றது.


Recommended For You

About the Author: Editor