வவுனியாவில் குருமன்காடு வீதியில் விபத்து !!

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் இன்று (23) ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வவுனியா நகரப்பகுதியிலிருந்து குருமன்காடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த முதியவரை அதே பகுதியில் பயணித்த ஒரு மோட்டார் சைக்கிள் முந்திச்செல்ல முயற்சித்தவேளை குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த 1990 அம்புலன்ஸ் வண்டி முதல் உதவி குழுவினர் உடனடியாக படுகாயமடைந்து மயக்கத்திலிருந்த வயோதிபருக்கு முதலுதவி சிகிச்சையளித்து வவுனியா பொது வைத்தியசாலை விபத்து பிரிவில் அனுமதித்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor