அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டம் பெற்றவர்களை பதிவு செய்யுமாறு உத்தரவு!!

ஏற்றுக் கொள்ளப்பட்ட வௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்ற பட்டதாரிகளை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மருத்துவப் பேரவைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்ற பட்டதாரிக சார்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனு இன்று (செவ்வாய்க்கிழமை) பிரசன்ன ஜயவர்தன, எல்.டீ.பீ. தெஹிதெனிய மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்ற 16 மாணவ, மாணவிகள் இணைந்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுக் கொள்ளப்பட்ட வௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்றிருந்த தம்மை இலங்கை மருத்துவ சபை தம்மை பதிவு செய்யவில்லை என்று மனுதாரர்கள் தெரிவித்திருந்தனர்.

இதன் காரணமாக தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என கோரிக்கை விடுத்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor