நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர் புகலிடக் கோரிக்கையாளர்கள் ஐவர்!

அவுஸ்ரேலியாவின் கிறிஸ்மஸ் தீவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 5 இலங்கையர்கள், நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அவுஸ்ரேலியாவிற்கு சொந்தமான விசேட விமானத்தினூடாக அவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதாக குடிவரவு, குடியகழ்வுத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் கயான் மிலிந்த குறிப்பிட்டுள்ளார்.

படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவிற்கு சென்றவர்களே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அத்தோடு, இவர்களின் புகலிடக் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ள ஐவரும் குடிவரவு, குடியகழ்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor