”சத்விரு அபிமன் 2019” வைபவம் !!📷

இராணுவத்தினருக்கு நலன்புரி நன்மைகளை வழங்கும் ”சத்விரு அபிமன் 2019” வைபவம் நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

முப்படையினர், பொலிசார் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் இராணுவத்தினர் மற்றும் இராணுவத்தினரின் பிள்ளைகள் உள்ளிட்ட 1504 பேருக்கு இந்த நன்மைகள் வழங்கப்பட்டன. இதன்கீழ் முழுமையாக நிர்மாணிக்கப்பட்ட 25 வீடுகள், பகுதியளவில் நிறைவு செய்யப்பட்ட 925 வீடுகள், மாணவர்களுக்கான 308 புலமைப்பரிசில்கள் மற்றும் வசிப்பிடங்களுக்கான 246 காணித் துண்டுகளை வழங்குதல் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, முப்படை தளபதிகள், பதிற் கடமை பொலிஸ்மா அதிபர், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Recommended For You

About the Author: Editor