தற்கொலை குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டார் ஞானசாரர்!!

ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை ஞானசார தேரர் நேரில் சென்று பார்வையிட்டார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விஜயம் செய்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பாதிக்கப்பட்டவர்களின் உடல் நலம் தொடர்பாக விசாரித்தார்.

கடந்த ஈஸ்டர் ஞாயிறு நடத்தப்பட்ட பயங்கரவாத தற்கொலை குண்டு தாக்குதலில் 250 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன் 500 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய இதுவரை 92 ற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor