சிறுவனை குழி தோண்டி புதைக்க முற்பட்ட மர்ம கும்பல் – விசுவமடுவில் பதட்டம்.

வீட்டுக்குள் புகுந்து வீட்டு உரிமையாளர்களை கை கால் வாய்களை கட்டிப்போட்டு அவர்களின் வீட்டு அருகில் மர்ம கும்பலொன்று கிடங்கு ஒன்றை கிண்டி மூடிவிட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் விசுவமடு புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.   சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது நேற்று முன்தினம் (20) இரவு 9 மணியளவில் சுமார் ஏழு பேர் கொண்ட மர்ம கும்பலொன்று நாதன் குடியிருப்பில் உள்ள வீடொன்றுக்குள் திடீரென புகுந்துள்ளனர்.

வீட்டில் நடக்கமுடியாத பெண்ணும் அவருடைய மகனும் இருந்த நிலையில், அவர்களை பிடித்து கைகள், கால்கள், கண்கள் மற்றும் வாயை கட்டிவிட்டு ஒரு அறைக்குள் இருவரையும் வைத்து பூட்டியதுடன் பிளாஸ்ரரால் வாயையும் ஒட்டடியுள்ளனர்.

தொடர்ந்து வீட்டுக்குள் பக்கத்தில் பாரிய கிடங்கொன்றை கிண்டி பின்னர் அந்த கிடங்கை மூடிவிட்டு கட்டிவிட்டு சென்ற சிறுவனுடைய கைகள், கால்கள்,கண்கள் மற்றும் வாயை அவிழ்த்து விட்டு அதிகாலை 3:00  மணியளவில் வீட்டை விட்டு சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் நடக்கும் போது வீட்டிலிருந்த பெண்ணின் தாயாரின் தந்தை (சிறுவனின் பேரன்) வெளியில் சென்றிருந்த நிலையில் காலையில் வீட்டுக்கு வந்த நிலையில் நடந்த சம்பவத்தை நேற்றையதினம் பொலிசாருக்கு தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து வீட்டுக்கு வந்து நடந்தவற்றை அறிந்துகொண்ட பொலிசார் வீட்டுக்காரரை அச்சசுறுத்தும் விதமாக நடந்து கொள்கின்றனர் என அங்கிருந்து வரும்செய்திகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை குறித்த வீட்டிற்க்கு செல்வதற்க்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

குறித்த கொள்ளை கும்பலுடன் பெண் ஒருவரும் இருந்துள்ளார்.பொலிசாருக்கு குறித்த மர்ம கும்பல் தொடர்பில் அறிந்திருக்கலாம் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் முன்னர் காணியை விற்பனை செய்த நபர் பொலிசாருடன் நெருக்கமான உறவுகளை வைத்திருப்பதாகவும் தான் விற்ற காணியை மீள அபகரிக்கும் நோக்கில் இவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம் எனவும் பிந்திய தகவல்கள் தெரிவிப்பதிடன் அங்கு மர்ம கும்பல் விட்டுச் சென்ற பாதணி ஒரு சோடி காணப்பட்டதாகவும் அதனை மர்ம கும்பல் தோண்டிய கிடங்கிற்க்குள் விட்டுச் சென்றுள்ளதாகவும் இதுவரை பொலீசார் எந்தவித தடய ஆய்வுகளும் மேற்கொள்ளவில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்