குடாநாட்டு குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் கட்டுமான பணிகள் அடுத்த மாதம் ஆரம்பம்.

யாழ்.குடாநாட்டின் குடிநீா் தேவைகளை நிவா்த்தி செய்யும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள வடமராட்சி களப்பு குடிநீா் திட்டத்திற்கான கட்டுமான பணிகள் அடுத்த மாதம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவால் தொடங்கிவைக்கப்படவுள்ளது.

குடாநாட்டில் வசிக்கும் சுமார் 6 லட்சத்து 30 ஆயிரம் மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் முன்மொழியப்பட்ட இந்தத் திட்டம் அமைச்சரவை அனுமதியைப் பெற்றுள்ள நிலையில் கட்டுமான பணிகள் ஆரம்பமாகவுள்ளது


Recommended For You

About the Author: ஈழவன்