வேலைக்கு சென்ற வீட்டில் திருடியவருக்கு நேர்ந்த கதி

வேலைக்கு சென்ற வீட்டில் நகைகளை திருடி அதனை அடகு வைக்க சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளாா்.

இந்தச் சம்பவம் திருகோணமலை – புல்மோட்டை பகுதியில் நடந்துள்ளது.

குறித்த வீட்டின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்தார். முறைப்பாட்டின் பிரகாரம் போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் குறித்த நபர் திருடிய ஆபரணங்களை வங்கியில் அடகு வைத்துள்ளார் அதனை இரகசிய தகவல்கள் மூலம் அறிந்த போலீசார் குறித்த நபரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் திருகோணமலை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து குறித்த நபரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.


Recommended For You

About the Author: ஈழவன்