கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி

இலங்கை அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்து அசத்திய முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை தற்போது படமாக எடுக்கவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

அதில் நடிகர் விஜய் சேதுபதி தான் முத்தையா முரளிதரனாக நடிக்கிறார். மேலும் ஷூட்டிங் இந்த வருட இறுதியில் துவங்கும் எனவும், இலங்கை, இந்தியா, இங்கிலாந்து மற்றும் உலகம் மற்ற பல இடங்களில் ஷூட்டிங் நடைபெறும் என கூறப்படுகிறது.

இருப்பினும் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் எதிர்பார்க்கலாம்.


Recommended For You

About the Author: Editor