லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து

லண்டனின் வால்தம்ஸ்டோவில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வால்தம்ஸ்டோவில் உள்ள செல்போர்ன் சாலையில் ஷாப்பிங் மால் உள்ளது. அங்கு உணவகங்கள் உள்ள தளத்தில் திடீரென தீப்பற்றியது. 66 கடைகள் உள்ள அந்த தளத்தில் பரவிய தீ பெரும் புகையைக் கக்கி கொளுந்துவிட்டு எரிகிறது.

சம்பவ இடத்துக்கு 100 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெறுகிறது. புகைமூட்டத்தால் செல்போர்ன் சாலை மூடப்பட்டுள்ளது

அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் ஜன்னல் கதவுகளை அடைத்துக் கொள்ளுமாறும், வெளியே வரவேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்னளர்.


Recommended For You

About the Author: Editor