நத்தைகளுக்கு நடத்தப்பட்ட ஓட்டப்பந்தயம்!

நத்தை தனது சோம்பலான நகர்வினால் உலகின் மிகவும் மெதுவாக செல்லும் உயிரினமாக கருதப்படுகிறது.

ஆனால் பிரிட்டனின் காங்கம் எனுமிடத்தில் ஒரு வட்ட மேஜையில் 160 நத்தைகள் கலந்துக் கொண்ட ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது.

மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில் கடைசி வெளிவட்டத்தை அடையும் நத்தைக்கும் அதன் உரிமையாளருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியையான மரியா வெல்பியின் நத்தை முதலிடத்தைப்பெற்றது. samie என்ற அவருடைய நத்தை முதல் கோட்டை முதலாக தாண்டியது.

1995ம் ஆண்டு ஆர்ச்சி என்ற நத்தை 33 அங்குலம் தூரத்தை இரண்டு நிமிடம் இருபது நொடிகளில் அடைந்து கின்னஸ் சாதனை படைத்தது.


Recommended For You

About the Author: Editor