காலநீடிப்பு செய்யப்படுகிறது அவசரகாலச்சட்டம்!

அவசரகால சட்டம் மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2 ஆவது பிரிவின் கீழ் அவசரகால சட்டம் நீடிக்கப்படவுள்ளதாக அவர் இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக 250இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 500 பேர் வரையில் காயமடைந்திருந்தனர்.

இதனையடுத்து நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் ஒருமாத காலத்திற்கு அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor