அமெரிக்காவில் இந்து சாமியார் மீது தாக்குதல்!

அமெரிக்காவில் இந்து சாமியார் ஒருவர் மீது மர்ம நபர் தாக்குதல் நடத்தி தப்பி ஓடினார்.

இந்த சம்பவத்திற்கு அதிபர் டிரம்ப்பின் கொள்கைகளை காரணம் என காங்., முன்னாள் அமைச்சரும், எம்.பி.,யுமான சசிதரூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சசிதரூர் அவரது டுவிட்டரில் இது குறித்து கூறியிருப்பதாவது: நியூயார்கின் குயின்ஸ் ஓக்ஸ் (புளோரல் பார்க் ) பகுதியில் சிவசக்தி பீட கோயில் உள்ளது.

இங்குள்ள சாமியார் ஹரீஸ் சந்தர் பூரிஜி தெருவில் சென்று கொண்டிருந்த போது ஒருவர் அவரை தாக்கியுள்ளார்.

இது எங்கள் நாடு என்ற கோஷத்தை எழுப்பியபடி ஓடினார். இது டிரம்பின் அகதிகள் மற்றும் வெளிநாட்டவர்கள் குறித்த சமீபத்திய அவரது பேச்சும், அவர்கள் மீதான கடும் நடவடிக்கையே இதற்கு காரணமாக அமைந்துள்ளது. இந்தியாவில் நடக்கும் தாக்குதல்கள் இதற்கு முன்னுதாரணமாக அமைகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சாமியாரை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் அவரது டுவிட்டரில் : ” எங்களின் நாடு அழகானது, வெற்றிகரமாக அமெரிக்கா முன்னேறி வருகிறது. எங்களின் நாட்டை நீங்கள் வெறுத்தால் இங்கு சந்தோஷமாக வாழ முடியாது. நாட்டை விட்டு போக வேண்டியது தான்.” என கூறியிருந்தார்


Recommended For You

About the Author: Editor