இந்திய அணியில் மூவகை தொடரிலும் இடம்பிடித்த ஒரே பவுலர்!

உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒரு நாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

இந்நிலையில் கடந்த 21ம் தேதி மும்பையில் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையில் நடைப்பெற்ற தேர்வு குழுவில் இந்திய அணியை தேர்வு செய்தனர்.

இந்த மூவகை போட்டிகளுக்கும் விராட் கோலி கேப்டனாக அறிவிக்கபட்டுள்ளது.

அஜின்கியா ரஹானே டெஸ்ட் போட்டிக்கு மட்டும் துணை கேப்டனாகவும் மற்று இரண்டு போட்டிக்கு ரோகித் சர்மா துணை கேப்டனாகவும் அறிவிக்கபட்டுள்ளது.

இதில் மிகவும் எதிர்பார்க்கப்பாட்ட தல எம்.எஸ் தோனி ஒரு போட்டியில் கூட இடம்பெறவில்லை.

உலகக்கோப்பையின் அரையிறுதியில் வெறித்தனம் காட்டிய ரவிந்திர ஜடேஜா மட்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ள மூவை தொடரிலும் இடம்பெற்றுள்ளார்.

இதன் பின் ரிஷாப் மற்றும், ரோகித் சர்மா கே.எல் ராகுலும் இடம் பிடித்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor