அவசரகால தடைச்சட்டம் நீடிப்பு

அவசகரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் அதிசிறப்பு வர்த்தமானியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.

இதனடிப்படையில் இன்று (22) ஜனாதிபதியின் உத்தரவின் பெயரில், ஜனாதிபதியின் செயலாளரினால் இந்த வர்த்தமானி அறவித்தல் வெளியிடப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், ஏப்ரல் 22ம் திகதி அவசரகால சட்டம் ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டது.

அவசரகால சட்டத்தை மேலும் நீடிக்கும் எண்ணமிருக்கவில்லையென ஜனாதிபதி வெளிநாட்டு தூதர்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்