வவுனியா புளியங்குளத்தில் ஆயுதங்கள் மீட்பு

புளியங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றுக்குள்ளிருந்து பெருமளவு ஆயுதங்களை இன்றைய தினம் திங்கட்கிழமை  இராணுவம் மீடடிருக்கின்றது.

இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து புளியங்குளம் பெரியமடு பகுதியில்  விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர், பொலிஸார் இணைந்து ஆயுதங்களை மீட்கும் செயற்பாட்டை முன்னெடுத்தனர்.

இதன்போது விடுதலைப்புலிகளால் மறைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும்  81எம்.எம்.குண்டுகள் 11, ரி.56 துப்பாக்கி , மிதி வெடி உட்பட சில ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயப்பகுதி (வருவாய்த்துறை) செயற்பட்டு வந்த பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்