கௌதாரி முனையில் மண் அகழ இடைக்கால தடை.

பூநகாி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கௌதாாிமுனை, மண்ணித்தலை, கல்முனை பகுதிகளில் தொடா்ச்சியாக பெருமளவு மணல் அகழப்பட்ட நிலையில், மணல் அகழ்வு பணிகளுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

நேற்றய தினம் பூநகாி பொலிஸ் நிலையத்தில் கூடிய கௌதாாிமுனை, மண்ணித்தலை மற்றும் கல்முனை பகுதி மக்கள் மணல் அகழ்வை நிறுத்தும்படி கேட்டிருந்தனா்.

இதன்படி இன்றைய தினம் மேற்படி விடயத்தை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்ற பொலிஸாா், வழக்கு தாக்கல் செய்த நிலையில் மணல் அகழ்வுக்கு 14 நாட்கள் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.

குறித்த பகுதியில் இயற்கையாக உருவான பாாிய மணல் மேடுகள் காணப்படுகின்றன. இவற்றை காலத்திற்கு காலம், பாாிய மணல் கொள்ளையா்களும், பணக்காரா்களும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றனா். மிக பெறுமதியான வளம் அந்த பகுதியில் உள்ளபோதும், இன்றளவும் கௌதாாிமுனை, மண்ணித்தலை, மற்றும் கல்முனை கிராமங்களுக்குமுறையான வீதி, குடிநீா், பேருந்து சேவை என்பன இல்லாத நிலையே காணப்படுகின்றது.


Recommended For You

About the Author: ஈழவன்