துப்பாக்கி காணாமல் போன விவகாரம் – 11 பேருக்கு இடமாற்றம்.

பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தின் பிரஜைகள் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 11 பேருக்கு உடனடி இடமாற்றம் வழங்குமாறு, உத்தரவிடப்பட்டுள்ளது.

பாணந்துறை பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த டி.56 ரக துப்பாக்கிகள் 2 காணாமல் போன சம்பவம் தொடர்பில், பாணந்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரால், இந்த இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் பிரஜைகள் நிலைய பொறுப்பதிகாரி , உப பொலிஸ் பரிசோதகர் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் 9 பேர் உள்ளிட்டவர்களுக்கே, இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில், முன்னதாக பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரபாத் பரணவிதாரணவும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும்  பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்