பிரான்ஸ் நாட்டவர் மீது துப்பாக்கி சூடு – உடுவலவ காட்டில் பதட்டம்.

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட பிரான்ஸ் நாட்டவா்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

உடுவலவ தேசிய வனவிலங்கு பூங்காவை பார்வையிட சென்ற பிரான்ஸ் நாட்டு தம்பதி மற்றும் அவர்களின் 12 வயது மகன் பயணித்த ஜீப் வண்டி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வேட்டையாடும் நபர்களினால் நேற்று இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பில் ஹம்பேகமுவ பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பூங்காவை பார்வையிடுவதற்காக சென்ற பிரான்ஸ் நாட்டவர்கள் காட்டில் ஓய்வெடுக்கும் போது வேட்டைக்காரர்கள் மூவர் வேட்டைக்கு செல்வதனை புகைப்படம் எடுத்துள்ளனர்.

பின்னர் பூங்காவை விட்டு வெளியே செல்லும் போது வேட்டைக்காரர்கள் அவர்களுக்கு தொல்லை கொடுக்க முயற்சித்துள்ளனர்.

அதற்கு வனவிலங்கு பூங்காவில் இருந்த சபாரி ஜீப் சாரதிகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். அந்த சந்தர்ப்பத்தில் வேட்டைக்காரர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த துப்பாக்கி சூட்டில் ஜீப் வண்டிக்கு பாதிப்பு ஏற்பட்ட போதிலும், பிரான்ஸ் நாட்டவர்கள் ஆபத்து இன்றி தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்