தீக்காயத்துடன் மீட்கபட்ட பெண் சிகிச்சை பலனின்றி மரணம்.

வீட்டுக்குள்ளிருந்து தீ காயங்களுடன் மீட்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிாிழந்திருக்கின்றாா்.

கடந்த சில நாட்களுக்கு முன்னா் வவுனியாவில் வீடொன்றிலிருந்து தீ காயங்களுடன் பெண் ஒருவா் மீட்கப்பட்டாா்.

குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளாா்.

முல்லைத்தீவு முள்ளியவளையைச் சேர்ந்த பெண்ணே உயிரிழந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பொதுமண்டப வீதி முதலாம் ஒழுங்கையில் அமைந்துள்ள வீட்டில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட கணவன், மனைவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த மனைவி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்