கன்னியா விவகாரம் – திரு.மேல் நீதிமன்று அதிரடி கட்டளை.

திருகோணமலை- கன்னியா வென்னீரூற்று பகுதியில் பிள்ளையாா் ஆலயத்தை உடைத்து பௌத்த விகாரை கட்டப்படுவதை எதிா்த்து திருகோணமலை மேல் நீதிமன்றில் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் வழக்கு தொடா்ந்த நிலையில் முக்கிய கட்டளை வழங்கப்பட்டது.

இந்து சமய தலைவா்களிடம் ஆசீா்வாதம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினா் கே.சயந்தன் ஆகியோா் இன்று காலை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனா்.

இதன்போது விகாரை கட்டுவதற்கு தடை, பற்று சீட்டு விற்பதற்கு தடை, இந்து மக்கள் தமது மத வழிபாடுகளை செய்ய தடை விதிப்பதற்கு தடை, ஆலய நிா்வாகம் கோவிலை நிா்வாகம் செய்வதற்கு தடை விதிக்க தடை ஆகிய 4 முக்கிய கட்டளைகள் வழங்கப்பட்டிருக்கின்றது.

 


Recommended For You

About the Author: ஈழவன்