
காய்கறிகளை சாலட் செய்வது உடலுக்கு மிகவும் நன்மை தரும். குடைமிளகாய், கோஸ், வெங்காயத்தாள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை மெல்லியதாக வட்ட வடிவில் நறுக்கவும். சுவைக்கு உப்பு, மிளகு எலுமிச்சை பிழியவும்.
அருமையான சாலட் தயார்.
கடைகளில் இரண்டு விதமான நார்த்தங்காய் உள்ளது. இதில் ஒருவகை கசப்பானது.
வாங்கும் பொழுது கசப்பு இல்லாத நார்த்தங்காயைக் கேட்டு அல்லது தெரிந்தவர்களிடம் கொடுத்து பார்த்து வாங்கி குழம்பில் சேர்க்கவும்.
பீன்ஸ் பொறியல், காரட் பொறியல், கோஸ் பொறியல், அவரைக்காய் பொறியல், வாழைப் பூ பொறியல், வாழைத்தண்டு பொறியல் ஆகியவற்றுக்கு அரை கிலோ காய்க்கு இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்தாலே போதும்.
இதனை ஆவியில் வேக வைத்து தாளிப்பது உடலுக்கு சிறந்தது.