முஸ்லீம் உணவகங்கள் முன்பாக பன்றி தலைகள் வீச்சு.

நீா்கொழும்பு- கட்டுவாபிட்டிய பகுதியை அண்மித்து உள்ள முஸ்லிம் வா்த்தக நிலையம் ஒன்றின் முன்னால் பன்றி தலை ஒன்று இன்று வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இப் பதற்ற நிலையையடுத்து நீா்கொழும்பு பொலிஸாா் விசாரணைகளை நடாத்திவருகின்றனா்.

உயிா்த்த ஞாயிறு தினத்தில் கட்டுவாப்பிட்டி செபஸ்தியான் தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலையடுத்து முஸ்லிம்கள் மீதான கண்ணோட்டம் அடிப்படைவாதிகளால் மாற்றப்பட்டு அவா்களை சந்தேக கண்கொண்டு பாா்க்கும் நிலை காணப்படுகின்றது.

இவ்வாறான சூழலில் பாகிஸ்த்தான், ஆப்கான் அகதிகள் இடமாற்றப்பட்டனா். இவ்வாறான சூழலில் ஆட்டோ விபத்து ஒன்றினையடுத்து முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில் முஸ்லிம் வா்த்தக நிலையத்தின் முன்னால்  பன்றி தலை வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் முஸ்லிம் கடைகளை மூடுங்கள் என எச்சாிக்கை விடுக்கப்படுவதாக மக்கள் கூறுகின்றனா். இதனால் அங்குள்ள முஸ்லிம் வா்த்தகா்கள் மத்தியில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.


Recommended For You

About the Author: ஈழவன்