தமிழில் கால் வைக்கும் ரகசியா!!

கதிர் நடிக்கும் சர்பத் படத்தின் மூலம் தெலுங்கு நடிகை ரகசியா கொரக் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

தெலுங்கில் சிற்சில கதாபாத்திரங்களில் நடித்துவந்த ரகசியாவுக்கு ‘ராஜா வரு ராணி கரு’ முக்கியப் படமாக அமைந்தது. அந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் தமிழ்த் திரையுலகில் கதிர் நடிக்கும் சர்பத் படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் கடந்த ஆண்டு பெரும் கவனம் பெற்ற கதிர், தற்போது விஜய்யுடன் இணைந்து பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

சர்பத் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியானது. அதில் சூரி, கதிர் ஆகிய இருவர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர்.

திண்டுக்கல்லை மையமாகக்கொண்டு படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. சில காட்சிகளை சென்னையிலும் படமாக்கியுள்ளனர். ஐடி துறையில் பணியாற்றும் கதிர் சகோதரரின் திருமணத்துக்காக ஊருக்குத் திரும்புவதும் அதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களும் திரைக்கதையில் முக்கிய இடம்பெற்றுள்ளன.

கதிரின் சகோதரராக விவேக் பிரசன்னா நடித்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் மற்றும் வியாகம் 18 ஸ்டூடியோஸின் பேனரில் உருவாகும் இந்தப் படத்தை பிரபாகரன் இயக்குகிறார்.
டி.பிரபாகரன் ஒளிப்பதிவு செய்ய, பிரசன்னா ஜி.கே. படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் அஜிஷ் இசையமைக்கிறார். தற்போது இதன் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.


Recommended For You

About the Author: Editor