நாளை ட்ரம் இம்ரான்கான் சந்திப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிற்கும் இடையிலான சந்திப்பு நாளை(திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது.

பாகிஸ்தானில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகள் மீது, அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதில்லை என கருதிய அமெரிக்கா, பாகிஸ்தானிற்கு வழங்கி வந்த பயங்கரவாத ஒழிப்பு நிதி உதவியை நிறுத்தியது.

பொய்களையும், வஞ்சகங்களையும் தவிர வேறொன்றையும் பாகிஸ்தான் வழங்கவில்லை என டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சுமத்தியிருந்தார்.

இதற்கிடையே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்றைய தினம் அமெரிக்காவினை சென்றடைந்துள்ளார். இந்த பயணத்தின்போது முதல் முறையாக அவர் ட்ரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார்.

டிரம்பும், இம்ரான்கானும் முதல் முறையாக அமெரிக்காவில் சந்தித்து பேசவுள்ளனர்.

அத்துடன் பாகிஸ்தானின் இரு இராணுவ உயர் அதிகாரிகள், பிரதமருடன் அமெரிக்கா சென்று இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor