போர் பதற்றம் சூழ்கிறது வளைகுடாவில் !

வளைகுடாவில் சிறைப்பிடிக்கப்பட்ட தமது நாட்டு கொடியுடனான கப்பலை ஈரான் விடுவிக்காவிட்டால், கடுமையான விளைவுகள் ஏற்படும் என பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் ஜெரமி ஹன்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானின் வடபகுதியை நோக்கி பயணித்த தங்களது கப்பலை தொடர்புகொள்ள முடியாதுள்ளது என ஸ்ரெனா இம்பீறியோஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த கப்பலில் 23 பேர் இருந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிறைப்பிடிக்கப்பட்டுள்ள குறித்த கப்பலை ஈரான் விடுவிக்க வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.


Recommended For You

About the Author: Editor