அமெரிக்காவில் வெப்பக்காற்று எச்சரிக்கை!

அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வானிலை ஆய்வாளர்களினால் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வார இறுதியிலிருந்து இவ்வாறு வெப்பக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் முக்கிய நகரங்களான நியூயோர்க், வொஷிங்டன், கிழக்கு கடற்கரையில் இருக்கும் போஸ்டன் மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் வசிக்கும் 200 மில்லியன் மக்கள் வெப்ப அலையால் பாதிக்கப்படலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

சில இடங்களில், 38 டிகிரி செல்சியஸுக்கு நெருக்கமாகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ வெப்பம் பதிவாகலாம். அமெரிக்கா மாத்திரமின்றி கனடாவின் சில பகுதிகளும் வெப்ப அலையால் தாக்கப்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த மாத ஆரம்பத்தில் ஆர்க்டிக் பகுதியில் அமைந்திருக்கும் அமெரிக்காவின் அலாஸ்காவில் அதிக வெப்ப நிலை பதிவாகியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor