சீரற்ற காலநிலையால் கேரளாவுக்கு சிவப்பு எச்சரிக்கை!

கேரளாவில் தாமதமாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரம் அடைந்துள்ள நிலையில், அம்மாநிலத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு, காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களிற்கே இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைப்படி கேரளாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) பலத்த மழை பெய்தது. பீர்மேடு, கோழிக்கோடு பகுதிகளில் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

அத்துடன் மலப்புரம், திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் 12 செ.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், சபரிமலையில் 5 செ.மீற்றர் அளவிற்கு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதன்காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், மலைக்கிராமங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor