சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’வில் இணைந்த பாலிவுட் வில்லன்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் இரும்புதிரை’ இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஹீரோ’.

இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன், இவானா , விவேக், யோகிபாபு, வடிவேலு உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

யுவன் சங்கர் ராஜா இசையில், ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் அபய்தியோல் அவர்கள் இணைந்துள்ளார். இவர் இந்த படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார்.

சமீபகாலமாக பாலிவுட் பிரபலங்கள் பலர் தமிழ் படங்களில் வில்லனாக நடித்து வருகின்றனர். அக்ஷய்குமார்.

விவேக் ஓபராய் ஆகியோர்களை தொடர்ந்து தற்போது அபய்தியோல் அவர்களும் தமிழ் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: Editor