தனுஷின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

தனுஷ் நடித்துள்ள ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, ‘அசுரன்’ மற்றும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் ஆகிய மூன்று படங்களும் இந்த ஆண்டுக்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படம் உருவாக உள்ளதாக ஏற்கனவே நாம் பார்த்தோம். இந்தப் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை ஒய்நாட் புரடொக்சன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடிக்கவுள்ள இந்த படத்தில் மேலும் சில நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாகவும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பிற விவரங்கள் இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .

சந்தோஷ் நாராயணன் இசையில் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் வினோத் ராஜ் குமார் கலை இயக்கத்தில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு அன்பரிவ் சண்டை பயிற்சியில் இந்த படம் உருவாக உள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

Y Not Studios@StudiosYNot

We are super excited to announce our Production No.18 starring @dhanushkraja and directed by @karthiksubbaraj.@sash041075 @chakdyn @Shibasishsarkar @RelianceEnt @Music_Santhosh @AishwaryaLeksh4@onlynikil

View image on Twitter

Recommended For You

About the Author: Editor