வெளியே முன்ஜாமின், உள்ளே ஜெயில்: மீராமிதுனின் நிலைமை!

பிக்பாஸ் வீட்டின் ஜெயிலில் அடைக்கப்பட்ட மீராமிதுன், அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் முன்ஜாமின் பெற்றுள்ளார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன் அழகிப் போட்டி நடத்துவதாகக் கூறி பல பெண்களை ஏமாற்றியதாக மீராமிதுன் மீது சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரஞ்சிதா என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் மீராவை விசாரணை செய்ய ஆஜராகுமாறு காவல்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர்.

ஆனால் மீரா, பிக்பாஸ் வீட்டில் இருப்பதால் அவர் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் காவல்நிலையத்தில் ஆஜராவார் என அவரது தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்று நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மீராவுக்கு நீதிமன்றம் முன்ஜாமின் அளித்தது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடந்த டிக்டாக் டாஸ்க்கில் சரியாக விளையாடாத மீராவை பிக்பாஸ் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார்.

அவருடன் சாக்சியும் ஜெயிலில் அடைக்கப்பட்டார். பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே வழக்கு ஒன்றின் முன்ஜாமின் பெற்ற மீரா, பிக்பாஸ் வீட்டின் உள்ளே சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor