‘ஆடை’ ரிலீஸில் திடீர் சிக்கல்: காலை காட்சி ரத்தானதால் ரசிகர்கள் அதிருப்தி

இன்று விக்ரம் நடித்த ‘கடாரம் கொண்டான்’ மற்றும் அமலாபால் நடித்த ‘ஆடை’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு முன்பதிவும் செய்யப்பட்டது.

திட்டமிட்டபடி விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ ரிலீஸ் ஆன நிலையில் அமலாபாலின் ‘ஆடை’ திரைப்படம் இன்று காலை காட்சி ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

காலை காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஒரு திரைப்படம் ரிலீஸ் செய்வதை 100% உறுதி செய்த பின்னரே முன்பதிவுக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் முன்பதிவு செய்துவிட்டு படம் பார்க்க தியேட்டருக்கு வரும் போது திடீரென காட்சிகள் ரத்து என கூறி ரசிகர்களை அலைக்கழிக்க வைப்பது மிகவும் தவறான செயலாகும் என்றும் ரசிகர்கள் கோபத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆடை’ படம் ரிலீஸ் ஆகாததற்கு இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு திடீரென ஏற்பட்ட பணபிரச்சனை தான் என்றும் இதனால் இந்த படத்தின் கேடிஎம் ரிலீஸ் ஆகவில்லை என்றும் அதனால் காலை காட்சி ரத்து செய்யப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் பேச்சுவார்த்தை நடந்து வருவதால் இந்த படம் இன்று மதியத்திற்குள் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுவிடும் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் காலைக்காட்சி ரத்தானதால் வெகுதூரத்திலிருந்து படம் பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பணம் மற்றும் நேரம் விரையம் ஆகியுள்ளதால் ரசிகர்கள் கோபம் கொண்டுள்ளனர்.

திட்டமிட்டபடி ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆகாதது இது முதல் முறை அல்ல. கடந்த சில மாதங்களாகவே அதிகாலை மற்றும் காலை காட்சிகள் ரத்து செய்யப்படுவது என்பது அடிக்கடி நிகழும் ஒரு வழக்கமாக இருக்கிறது.

இதற்கு முன்னர் பல பிரபலங்களின் திரைப்படங்கள் அதிகாலை காட்சி ரத்து செய்யப்பட்டதால் டிக்கெட் முன்பதிவு செய்து விட்டு படம் பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor